நல்லாட்சி அரசில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறுவது தொடர்பில் தீர்மானம் எடுக்க இருக்கிறோம்; - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா



-செங்கலடி நிருபர்-

நல்லாட்சி அரசில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறுவது தொடர்பில் தீர்மானம் எடுக்க இருக்கிறோம் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை காலை ஏறாவூர் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வெற்றிபெற்று தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சத்தியப்பிரமான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நம்பிக்கை இல்லாப் பிரேரனை பிரதமருக்க எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது கடந்த இரண்டரை வருட ஆட்சியிலே பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவில்லை , அபிவிருத்தி பணியில் முன்னேற்றம் இல்லை நாட்டு மக்கள் எதற்காக ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தார்களோ அந்த இலக்கை இந்த அரசு அடையவில்லை இதை மக்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் சொல்லியிருக்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சியும் தோல்வியடைந்துள்ளது எமது கட்சியும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆட்சியிலே மக்கள் எதிர்பார்க்கின்ற பொருளாதார முன்னேற்றம் அடையவேண்டிய தேவை இருக்கின்றது. அது தொடர்பாகத்தான் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரனையை முன்வைத்துள்ளார்கள் அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை நாம் இன்னமும் எடுக்கவில்லை அது தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் கூடி எடுக்கவுள்ளோம்.

நாட்டிலே ஒரு இஸ்திரம் இல்லாத ஆட்சியை மேற்கொள்ள எங்களால் முடியாது. குறிப்பாக சிங்கள பகுதிகளில் காணப்படும் முஸ்லிம்களுக்கான அச்சுறுத்தல் என பல சம்பவங்கள் அப்படியான ஒரு இஸ்திரம் இல்லாத ஆட்சி நாட்டில் உருவாகும் போது பௌத்த தீவிரவாதிகளுக்கு இப்படியான செயற்பாட்டால் இன்னும் இலகுவாகவிருக்கும் அதற்கு களமமைத்து இடமளிக்க கூடாது ஆகவேதான் நாட்டில் ஒரு இஸ்திரமான ஆட்சி இடம்பெறவேண்டும் நாட்டில் பொருளாதாரம் பாதுகாக்கூடிய வகையிலேயான உருவாகத்தின் ஊடாக அரசு இயங்க வேண்டிய சூழ்நிலையுள்ளது.

நாளைகூட சில வேளை நல்லாட்சி அரசில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறுவது தொடர்பாக யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த நல்லாட்சியில் இருந்து வெளியேறி அமைச்சுக்களை இராஜனாமா செய்து எதிர்க்கட்சியிலே இருக்கின்றவாறு நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். இப்டியான சூழ்நிலையிலே எமது கட்சியை பலப்படுத்துவதன் மூலமாகத்தான் எதிர்வரும் தேர்தலிலே நாம் பலமான அணியாக மாற முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.