
மட்டக்களப்பு ரிதிதென்னை பிரதேசத்தில் 60 ஆயிரம் ரூபா பெறுமதியான ஹரோயினுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ. சிவதர்சன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை ரிதிதென்னை பிரதேசத்தில் வீதியில் வைத்து குறித்த நபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 3.110 மில்லிக்கராம் ஹரோயின் போதைப் பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்