மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா


மட்டக்களப்பில் BECS கல்லூரியின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா (29) ஞாயிற்றுக் கிழமை பெரிய ஊரணி அமெரிக்கன் மிஷனில் கல்லூரியின் பணிப்பாளர் A,K. முருககுமார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் அதிதிகளாக  மட்டக்களப்பு தேசியக் கல்வியியல் கல்லூரியின் தலைவர் S. ராஜேந்திரன், கல்க்குடா கல்விவலயப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்தி, மட்டக்களப்பு மத்தி கல்விவலயப் பிரதிப் பணிப்பாளர் கலீலுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் பிரதான அம்சமாக முன்பள்ளி ஆசிரியர்கள் பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.