-செங்கலடி சுபா -
கிராமத்திற்கு பொலிஸ் என்ற வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக ஏறாவூர் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு ஏறாவூர் பற்று தளவாய் பிரதேசத்திலுள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கியதாக மக்களின் காலடிக்கு சென்று பொலிஸ் சேவைகளை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கான நடமாடும் உப பொலிஸ் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு சிந்தக்க பீரிஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு கபில ஜெயசேகர அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கௌரவ அதிதிகளாக செங்கலடி பிரதேச செயலாளர் திருமதி.எம்.முகுந்தன், செங்கலடி பிரதேச சபை தவிசாளர் நா.கதிரவேல்,ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் பிரபாகணேஸ், ஏறாவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்,மரண விசாரணை அதிகாரி முகம்மது நஸீர், செங்கலடி சுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா, தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் ரவிதேவன், மற்றும் சர்வ மத தலைவர்கள், கிராம சேவகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததனர்.
















.jpg)







.jpg)