மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடத்திலுள்ள இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை (23) அதிகாலை ஓந்தாச்சிமடத்திலுள்ள மாரியம்மன் ஆலயம் மற்றும் சித்திவிநாயகர் ஆலயம் ஆகியனவே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதன்போது மாரியம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பெருமளவான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் அம்பாளின் நகைகள் மற்றும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வவுனியா, வைரளிங்குளத்திலுள்ள ஆதிவிநாயகர் ஆலயமொன்றிலும் கொள்ளைச் சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4










.jpg)

.jpg)

