ஏறாவூரில் அரிசி ஆலைகள் சில முறையற்ற கழிவகற்றல் இல்லாமையினால் மக்கள் பெரிதும் பாதிப்பு!


செங்கலடி நிருபர் 
ஏறாவூரில்  காணப்படும் அரிசி ஆலைகள் சில முறையற்ற கழிவகற்றல் முகாமைத்துவம்  இல்லாமையினால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். 

ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குற்பட்ட ஏறாவூர் மிச்நகர், ஏறாவூர் ஐயன்கேணி ஆகிய பிரதேச மக்கள் இப் பிரச்சிணைக்கு உள்ளாகின்றனர். 

பிரதேசத்தில் சுமார் 20 ற்கு மேற்பட்ட அரிசி ஆலைகள் காணப்படுவதாகவும் அவற்றில் சில அரிசி ஆலைகள் கழிவுகளை(சாம்பல், உமித்தூசி) ஆகியவற்றை  தொழிற்சாலைக்கு பின்புறத்தில் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் வெட்டவெளியில் கொட்டுவதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். . 

தற்போது வீசும் அதிக காற்றினால் இக் கழிவுகள்  வீட்டினுள் குறிப்பாக கிணறுகளில்; காற்றின் மூலம் கலப்பதனால் பெருமவதியுறுவதாக தெரிவிக்கின்றனர்.
கைத்தொழில் செய்து இடியப்பம் அவித்து எமது வாழ்க்கையை நடாத்துகின்றோம் இத் தூசியினால் எமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிப்பதற்கு நீர் அள்ளி வைத்துள்ளோம் குடிக்க இயலாத நிலைமையில் உள்ளோம், சமைத்து வைத்தால் அதிலும் தூசி, எத்தனை தடவை கழுவியும் உடைகள் தூசியினால் அழுக்காகின்றன என பல பிரச்சிணைகளை எதிர் நோக்குவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 
இது குறித்து அதிகாரிகள் அசமந்தபோக்கு தனமாக இருக்காமல் தமது இந் நிலைதொடர்பில் கூடிய கவணம் செலுத்தி தீர்வைப்பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.