பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுவூட்டும் பொருட்டு பயிற்சி செயலமர்வு




இலங்கை பெண்கள் பணியகம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் இணைந்து பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுவூட்டி சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.


இதற்கமைய  நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களை வலுவூட்டும் பொருட்டு பயிற்சி செயலமர்வு  23.10.2018 அன்று   பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் மூலம் வறிய நிலையிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் மானியத் தொகைகளை வழங்கி அக்குடும்பங்களை பொருளாதாரத்தில் முன்னேற்றமடையச் செய்யும் நோக்குடனேயே இத்திட்டத்தினை இலங்கை பெண்கள் பணியகம் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுத்த வருகின்றன.


நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.சிவநேசன் வளவாளராக கலந்து கொண்டு சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் சுயதொழில் விருத்தி தொடர்பாக விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.சிபாயா இ நிவாரண சகோதரி யூ.றமீஸா  ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.


(ஏ.எஸ்.எம்.முஜாஹித்)