இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் , சீ.யோகேஸ்வரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் ஆயுள்வேத பணிப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்
நாங்கள் உடலில் இருக்கின்ற நோயை உடனடியாக குணப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கின்றோம். ஆனால் எங்களுடைய மூதாதையர்களான சித்தர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்வதற்கு இந்த மருத்துவ முறையினை பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஆங்கில மருத்துவத்திற்கு முன்னரே இந்த மருத்துவ முறையினை எமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
சித்த மருத்துவ முறையானது எமது பக்தி, இறைமை, மரபு, பண்பாடு என்பனவற்றுடன் பின்னிப்பிணைந்த ஒரு மருத்துவ முறையாகும். ஆனால் நாங்கள் பேசுகின்றோம் இந்த வைத்தியத்தை செய்வதில்லை. உடனடி மருத்துவம் பக்க விளைவுகளை ஏற்படுத்தி உயிர்களை காவுகொள்கின்றது. பக்கவிளைவுகள் இல்லாத இதுபோன்ற மருத்துவத்தை நாடி நோய் நாடாத உடலை பெற்றுக்கொள்ளுங்கள். எனக் குறிப்பிட்டார்.