மிளகாய் அறுவடை விழா




தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் சமூக சேவைப் பிரிவினால் செய்கை பண்ணப்பட்ட மிளகாய் அறுவடை விழா இன்று (25) இடம்பெற்றது.


இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன்இ பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன்இ நிருவாக உத்தியோகத்தர் எஸ்.கணேஷமூர்த்திஇ சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ரி.ஜெயவாணிஇ நிருவாக கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.றஞ்சன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தனர்.

(ஏ.எஸ்.எம்.முஜாஹித்)