வீட்டுத் தோட்டச் செய்கையாளர்களக்கான விழிப்புணர்வு




ஜனாதிபதியின் தேசிய உணவு உற்பத்தி மற்றும் போசாக்கு வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வீட்டுத் தோட்டச் செய்கையாளர்களக்கான விழிப்புணர்வு நிகழ்வு 23.10.2018 அன்று   பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது வீட்டுத் தோட்டத்திற்கான சேதனப் பசளை உபயோகித்தல் மற்றும் போசாக்கான நஞ்சற்ற உணவுப் பயன்பாடு தொடர்பாகவும் கலந்து கொண்ட வீட்டுத் தோட்ட செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

நூவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் நாவிதன்வெளி பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் ஏ.எச்.எம்.ஜாபீர்இ சவளக்கடை விவசாய கேந்திர நிலையத்தின் அன்னமலை விவசாய பிரிவு விவசாய போதனாசிரியர் என்.ஜெகதீஸ்வரன் ஆகியோர்கள் வளவாரளாக கலந்து கொண்டனர்.

(ஏ.எஸ்.எம்.முஜாஹித்)