பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற பூரணகும்பம் நிறுத்தும் அருள் நிகழ்வு.




ரவிப்ரியா

மட்டக்களப்பு மாவட்டத்தின் தலை நகரிலிருந்து தெற்காக சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் அமையப்பெற்ற பக்தர்களால் கண்கண்டதெய்வமென துதிக்கப்படும் அருள்மிகு கடல்நாச்சியம்மன் ஆலய வருடாந்த ஒருநாள் திருச்சடங்கு கடந்த திங்களன்று அதிகாலையில்திருக்கதவு திறத்தல், பாற்குடபவனி பாலாபிஷேகம் என்பன இடம்பெற்றது. தொடர்ந்து மடிப்பிச்சை வட்டுக்கத்துதல என்பன இடம் பெற்றுஅந்திசாயும் வேளையில் அதி சக்திவாய்ந்த அம்மன் முகக்களை அலங்கரிக்கப்பட்ட பேழையில் வைத்து சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர்ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி பக்திபூர்வமாக எடுத்துவரப்பட்டது.

தாய்க்குலம் அலகு குத்தி கையில் கற்பூரச்சட்டி ஏந்தி ஒளிபரப்பிவர கற்பூர புகை கருமேகமேன பேழை மேல் அணிவகுத்துவர; முழுமதிபோல்அம்மன் பேழை பக்தர்களைப் பரவசப்படுத்த ஞான நிலை காட்டி மூவர் ஒரே பறவைக் காவடியில் மெய்சிலிர்க்க வைக்க மற்றுமொருபறவைக் காவடியில் இளைஞர் ஒருவர் நிலத்திற்குச் சமாந்தரமாக அந்தரத்தில் தொங்கியவாறு அம்மனுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற்றமுள்ளுக் காவடிகளும் மற்றைய பாற் காவடிகளும் ஆனந்தமிகுதியால் ஆட்டம் போட, வரும்வழியெல்லாம் நிறைகுடங்களுடன் குடும்பம்குடும்பமாக தங்கள் வீட்டு வாசல்களில் நின்று அம்மனை வரவேற்க மேள தாளம் முழங்க இளைஞர்களும் வாத்தியங்கள் இசைக்க பஞ்சபூதங்களில் உள்ளடங்கும் நீரோடையும் கடலும் ஆர்ப்பரிக்க இதமான இளந் தென்றலென காற்றும் வருட ஆலய அரச ஆல விருட்சங்களும்இலைகள் அசைத்து தாங்களுமதான்; இணைந்து வரவேற்கின்றோம் என இனம் காட்ட கதிரவனும் கண்கள்; களைப்படைந்து ஒதுங்கிக்கொள்ள முண்டியடித்தபடி பக்தர்கள் பேழை தொட்டு ஆசீர்வாதம் பெற அம்மன்பேழை அலயத்துள் உள்வாங்கப்பட்டது.

மரபுமறைப்படி தட்டுக்கள் போட்டு சேலையால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் முகக்களை அதில் வைத்து உரிய எண்ணிக்கையில் வட்டாக்கள்வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கமுகம் பாளை மணத்துடன் சந்தணக்குச்சி சாம்புராணி; வாசனை எங்கும் பரவ. முக்கனிகளுடன்அன்னாசி மற்றும் கனிகளின்; மணமும் கலக்க தெய்வங்கள் ஆட அம்மனை வசீகரிக்கும் அத்தனை அம்சங்களும் மண்டபம் நிறைந்துகாணப்படடது.

அத்துடன் மண்டபம் நிறைந்;த பக்தர்கள் கூட்டமும் தூக்கம் துறந்து துல்லியமாக பூரண கும்மம் நிறுத்தும் அற்புத நிகழ்விற்கு காத்திருக்கசரியாக நள்ளிரவு 12.00 மணிக்கு அம்மன் திரை விலக அரோகரா கோஷம் விண்ணில் முட்டி எதிரொலிக்க பூசகர் வாயில் சீலை கட்டிமுழந்தாளிட்டு பூரண கும்பத்தை ஏந்தினார். அவரது உடலும் கரங்களும் கும்பமும் படிப்படியாக நடுங்குவதிலலும் உயர்வதிலும் வேகம்காட்டி உயர்ந்து தாழ்ந்து கும்பம் இறுதியில் அம்மன் வருகை உறுதியானதும் உரிய இடத்தில் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பக்தர்களின் பொங்கல் படைத்து செவ்வாய்ககாடுதல்
நிகழ்வு இடம்பெற்று சமுத்திரத்தில் கும்பம் சொரியும் நிகழ்வுடன்ஒருநாள்
சடங்கு முழுமை பெற்றது.