திருக்கோவில் பிரதேசத்தில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட விலை கட்டுப்பாடுகள் அறிமுகம்



[NR]

திருக்கோவில் பிரதேசத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் மற்றும்  தளர்த்தப்படும் வேளைகளில் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான  வர்த்தகர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், மொத்த, சில்லறை, விற்பனையாளர்கள் ஆகியோரும் பிரதேச செயலகமும் ஒன்றினைந்த செயற்பாடுகளின் ஊடாக மக்கள் ஒன்றாகக் கூடுவதனை தவிர்த்து சமூக இடைவெளியை பேணி இவ் கோரோணா COVID 19 பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கூட்டம் 2020.04.09 இன்று பிரதேச செயலாளர் த. கஜேந்திரன் அவர்களின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


இவ் விஷேட கூட்டத்தின் போது தற்போது நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் வர்த்தகர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், மீன்பிடி சங்கத்தினர், மொத்த, சில்லறை, விற்பனையாளர்கள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள் அவர்களிடம்  இருந்து அறியப்பட்டதுடன் அவற்றுக்கான மாற்றுத்தீர்மானம் என்பன கலந்து ஆராயப்படதுடன், அவர்கள் இவ் அசாதாரண சூழ்நிலை காலபகுதியில் எவ்வாறு ஒத்துழைப்புடன் நடந்துகொள்வது தொடர்பான தீர்மானங்களும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டது.

இவ் விஷேட கூட்டத்தில் பிரதேச செயலக உதவி செயலாளர் சதீஷ், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர்  R.W. கமலராஜன், திருக்கோவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி S.S. ஜயவீர, முப்படையினர், மற்றும் வர்த்தகர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், மீன்பிடி சங்கத்தினர், மொத்த, சில்லறை, விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்  விஷேட கூட்டத்தின் மூலம்  பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

  • பிரதேசத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மக்கள் நலன் கருதி விசேட நடமாடும் வியாபார சேவை அறிமுகம் செய்தல்.
  • பிரதேசத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் நடமாடும் வியாபாரம் மற்றும் வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலை கட்டுப்பாட்டுகள்.
  • நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்கப்பட்டால் கிராம சேவகருக்கு அறியபடுத்தவும்.
  • மக்கள் ஒன்றாகக் கூடி அத்தியாவசிய உணவுப்பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முகமாக திருக்கோவில் மத்திய சந்தையில் உள்ள பொருட்களை  5  இடங்களுக்கு மாற்றம் செய்தல். 
  • திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் வர்த்தக தேவைக்காக Pass வழங்குதல்.

நிர்ணயிக்கப்பட்ட விலை கட்டுப்பாட்டுகள்