தாந்தமலை கிராமத்தில் வாழுகின்ற 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு.

(சித்தா)
களுவாஞ்சிகுடி வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பு அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகளின் நிதி பங்களிப்புடன் 1300 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தாந்தமலை கிராம சேவக பிரிவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு சட்டத்தினால் நாளாந்த கூலித் தொழிலினை இழந்து வறுமையில் வாழுகின்ற 100 கும்பங்களுக்கு 1300 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்று 07.05.2020 வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பின் தலைவர் செ. ஜேசுசகாயம், தாந்தமலை கிராம சேவக உத்தியோகஸ்தர் திரு சஜந்தன், சமூத்தி உத்தியோகஸ்தர், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பங்கு கொண்டு வழங்கி வைத்தனர்.