ஜனநாயக போராளிகள் கட்சி; தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க முடிவு


(கதிரவன்)
நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஜனநாயக போராளிகள் கட்சி; தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஆகியோருக்கு இடையே இன்று சம்பந்தன் அவர்களது இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறித்த கட்சியினர் தெரிவித்தனர்.

நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரச்சாரப் பணிகளை செய்வதாகவும் அனைத்து தமிழ் மக்களும் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் அகில இலங்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து  பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

இத் தேர்தலில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதோடு வெற்றி பெறுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தார்கள்.

இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளி கட்சியின் தலைவர் சி.வேந்தன், செயலாளர் இ.கதிர், ஊடகப் பேச்சாளர் க. துளசி, உட்பட 15 போராளிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.

காலை 11 மணி தொடக்கம் 12 30 மணி வரை இச்சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர், ஊடகப்பேச்சாளர் க. துளசி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் கருத்துக்களை தெரிவித்தார்கள்.