உலகின் முதலாவது பாம்புகள் மாநாடு இலங்கையில்!



இலங்கையில் முதன்முறையாக நடைபெறும் முதலாவது உலக பாம்புகள் மாநாடு – 2026 சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தியின் பங்கேற்புடன் ஆரம்பமாகவுள்ளது.

“Snakes, Science, Species Survival & Sri Lanka” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையிலுள்ள பாம்பு இனங்களின் பன்முகத்தன்மை, அவற்றின் பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான முக்கிய விடயங்கள் மாநாட்டில் ஆராயப்படவுள்ளன.

மேலும், பாம்பு இனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றின் இருப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் தமது அறிவையும் ஆய்வு அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.