
தனக்கு முன்னர் பதவியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி ஒருவர், ஓய்வுபெற்ற பின்னர் 16 சமையல்காரர்களைக் கோரியதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்த முன்னாள் ஜனாதிபதிக்கும் ஒரு சமையல்காரரைக்கூட வழங்கவில்லை எனக் கூறினார்.
“16 சமையல்காரர்களைக் கேட்டார். ஓய்வுக்குப் பிறகு உணவகம் திறக்கப் போகிறாரோ என நினைத்தேன்,என அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சலுகைகள் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருந்ததாகவும், அந்தச் சலுகை அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





.jpg)
.jpg)


.jpg)


