இலங்கையில் திருமணமான சில ஆண்களிடையே தாம்பத்திய நெருக்கத்திலிருந்து விலகும் போக்கு அதிகரித்து வருவதாக உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆலோசனை பெற வருபவர்களில் சுமார் 80% பேர் பெண்கள் என்றும், திருமணத்திற்குப் பின்னர் கணவர்கள் படிப்படியாக தாம்பத்திய நெருக்கத்திலிருந்து விலகுவதாக அவர்கள் தெரிவிப்பதாகவும் ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார். குறிப்பாக 35 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களிடம் இத்தகைய பிரச்சினைகள் அதிகம் அவதானிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி, வேலை அழுத்தம், குடும்பப் பொறுப்புகள், மனச்சோர்வு மற்றும் உணர்வுரீதியான களைப்பு போன்றவை தாம்பத்திய ஆர்வத்தைப் பாதிக்கக்கூடும் என ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
மேலும், அதிகப்படியான மொபைல் பயன்பாடு, இணைய ஆபாச உள்ளடக்கங்களை அதிகம் பார்ப்பது மற்றும் தம்பதிகளுக்கிடையிலான தொடர்பாடல் குறைவு ஆகியவையும் நெருக்கத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தாம்பத்திய உறவிலிருந்து விலகுவதை அன்பு அல்லது ஈர்ப்பு குறைந்துவிட்டதாக மட்டும் கருதக்கூடாது என்றும், தொடர்ச்சியான பிரச்சினைகள் காணப்பட்டால் தம்பதிகள் வெளிப்படையாகப் பேசி, தேவைப்பட்டால் தொழில்முறை ஆலோசனையை நாட வேண்டும் என்றும் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.




.jpg)





.jpg)

.jpg)
