மின்னேரியாவில் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை சடலமாக மீட்பு


வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியையும், கலை மற்றும் இலக்கியத் துறைகளில் ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தவருமான வனிதா சேனாதிராஜா, நேற்று (23) புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மின்னேரியா பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் இருந்து அவரது சடலம் காணப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், வனிதா சேனாதிராஜா தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என மின்னேரியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், இது தொடர்பில் இறுதியான முடிவு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள், விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.