
திகாமடுல்ல மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் மன்றம் ஒன்றை அமைத்து அதனூடாக எமது மாவட்டத்தில் வாழும் தமிழ் சமூகத்தின் இருப்பு, கல்வி அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சி, வறிய நிலையில் உள்ள சாதாரண மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், விவசாய துறை சார் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல், உறுதியான சுகாதாரத்துறை, கட்டுமான அபிவிருத்தி போன்ற எமது மக்களின் இயல்வு வாழ்க்கைக்கு இன்றியமையாதுள்ள முக்கிய விடயங்களை தொடர்சியாக முன்னெடுத்து செல்ல கூடிய மக்கள் மன்றத்தை தான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் ஒரு சில மாத காலப்பகுதிக்குள் அமைத்து மக்கள் நல செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வேன் என்று திகாமடுல்ல மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் DR.இரா.சயனொளிபவன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் கூறுகையில் தான் எதிர்வருகின்ற 2020 க்கான பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அனைத்து தமிழ் கிராமங்களையும் ஒன்றிணைத்து மக்கள் நல மையம் என்ற ஒரு செயல்திட்டத்தின் கீழ் மக்களது தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இனம்காணுவது மட்டுமல்லாது தமது பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பங்குபற்றுதலின் உடன் அமைக்கப்படும் மக்கள் மன்றத்தின் ஊடாக தீர்வினை பெற்று கொடுக்க போவதாகவும் கருத்து தெரிவித்தார். குறிப்பாக ஒவ்வொரு தமிழ் பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்
- சம்மாந்துறை பகுதி
- கல்முனை பகுதி
- காரைதீவு பகுதி அட்டப்பளம், நிந்தவூர் உள்ளடங்கலாக
- அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதி
- திருக்கோவில் தம்பிலுவில் பகுதி
- பொத்துவில் பகுதி
உள்ளடங்கலாக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை உள் வாங்கும் வகையில் மக்கள் மன்றம் ஒன்று அமையும் என்றும் குறிப்பிட்டார்.
இவ் மக்கள் நல மையமானது துறைசார் வல்லுநர்களையும் மற்றும் துறை சார் அனுபவம் கொண்ட நபர்களையும் அங்கத்தவர்களாக கொண்டும் இயங்கும் என்றும் அந்தவகையில் இம் மையமானது ஒரு செயல் திறன் உள்ள மன்றமாக இயங்கும் வகையில்
- காணி நிர்வாகம் தொடர்பாக ஒரு நிபுணரும்
- கல்வி முன்னேற்றகர செயற்பாடுகளுக்கான ஒரு நிபுணரும்
- இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு நிபுணரும்
- விவசாயம் தொடர்பாக சாதாரண மக்களில் இருந்து ஒரு நிபுணரும்
- திகாமடுல்ல தமிழர்கள் எதிர்கொண்டுள்ள காணி மற்றும் எல்லை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சட்டம் தொடர்பாக ஒரு நிபுணரும்
- சுகாதார துறையை பிரதிநித்துவம் வகிக்கும் வகையில் ஒரு துறைசார் நிபுணரும்
- பொறியல் கட்டுமான தொடர்பாக ஒரு பிரதிநிதித்துவம்
- சிறுவர் நன்னடத்தை, பெண்கள் பாலியல் வன்புணர்ப்பு மற்றும் பெண்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு பெண் நிபுணரும்
குறிப்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் காணிகள் மற்றும் எல்லைகள் சகோதர இனத்தவரின் அடக்குமுறைக்கும் அதேபோல் தேசிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் உட்பட்டு பறிபோய்க் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் உணர்ச்சிவசப்படும் முறையில் பேசுவதன் மூலமோ அல்லது அடாவடித்தனமாக முறையில் சண்டையிடுவதன் மூலமோ பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீள பெற்றுக்கொள்ள முடியாது என்றும், சிறந்த தீர்வினை எப்போதும் மாவட்ட காணி அலுவலகத்தின் ஊடாகவோ அல்லது நீதி பொறிமுறையின் ஊடாகவே பெறமுடியும் என்றும் அப்படியான ஒரு தீர்வே ஒரு நிலையான தீர்வாக அமையும் என்றும், மேலும் தாம் அமைக்கவிருக்கும் மக்கள் மன்றம் தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு மட்டுமல்லாது அதேபோன்று திகாமடுல்ல மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏனைய நல விடயங்களிலும் பெரும் பங்கு ஆற்றும் என்றும் குறிப்பிட்டார்.
மக்கள் மன்றமானது குறைந்தது மூன்று மாதம்களுக்கு ஒரு முறை கூடும் எனவும் மற்றும் தேவை ஏற்படின் இம் மன்றமானது உடன் கூட்டப்படும் என்றும் கூறியதோடு மன்றத்தின் கூட்டத்தொடரானது சுழற்சி முறையில் இந்தமாவட்டத்தில் உள்ள தமிழ் பகுதிகளில் முறையே இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார். இந்த வகையில் மக்கள் மன்றமானது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளுக்கு செல்லும் என்றும், மக்கள் மேலும், மக்கள் பிரதிநிதியினை தேடிச்செல்ல வேண்டிய அவசியம் எழாது எனவும் இந்தவகையில் மக்கள் அவர்களது பகுதிகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தம்மால் இலகுவாக இனங்காண்பது மட்டுமல்லாது மேலும் அம் மக்களுக்கு தீர்வினையும் பெற்று கொடுக்கவும் முடியும் என்றும் DR .சயனொளிபவன் தெரிவித்தார்.















.jpg)