அம்பாறையில் நான்கு ஆசனங்கள் சிங்கள மக்கள் இடையேயும், இரண்டு ஆசனங்கள் முஸ்லிம் மக்கள் இடையேயும் உறுதிப்படுத்தப்பட்டதன் விளைவாக எஞ்சி இருக்கும் ஒரு ஆசனம் யாருக்கு கிடைக்க போகின்றது என்பதே தற்பொழுது எழுந்துள்ள கேள்வியாகும். பெரும்பாலும் இந்த ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ளப்போவது அதாவுல்லாவா இல்லை தமிழ் மக்களா என்பதே இங்கு பிரதான கேள்வியாக எழுந்துள்ளது என திகாமடுல்ல மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் Dr இரா. சயனொளிபவன் மணற்சேனையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில்
இம்முறை தேர்தலிலே பல தேசிய மற்றும் பேரினவாத கட்சிகளும், அத்தோடு எண்ணிலடங்கா வேட்ப்பாளர்களும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் குறித்த 7 பாராளுமன்ற ஆசனத்திற்காக கடுமையான போட்டியில் தங்களது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். .
தற்பொழுது அம்பாறை மாவட்ட தமிழர்களின் அளிக்கப்படக்கூடிய வாக்குகளாக அண்ணளவாக 95,000 வாக்குகள் கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும் மற்றும் எமது தமிழ் பிரநிதித்துத்வத்தை இழக்க செய்வதற்காக பல தேசிய கட்சிகளும் பல சுயேட்சை குழுக்களும் இத்தேர்தலிலே களமிறக்கப்பட்டுள்ளன.
கட்சி பேதங்கள், தனிப்பட்ட வெற்றி தோல்விகளுக்கப்பால் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தியே ஆக வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் நாம் இன்று பயணிக்கின்றோம். பெரும்பாலான வேட்பாளர்கள் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இம்முறை அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் களமிறக்கியுள்ளனர். இதனை நாம் நன்கு உணராவிடின் இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி வலையிலே சிக்கி அரசியல் அநாதையாகிவிடுவது மாத்திரமன்றி பிற சமூகத்திடம் கையேந்தி நிற்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு அம்பாறை தமிழர்கள் நாம் புறந்தள்ளப்படுவோம்.
மேலும் 37% உள்ள சிங்கள மக்கள் 4 ஆசனங்களையும், 45% உள்ள முஸ்லிம் மக்கள் 2 ஆசனங்களையும் பெறவுள்ள நிலையில் 18% உள்ள தமிழர் நாம் ஒரு ஆசனத்தை தக்கவைத்து கொள்வதற்கு பலத்த போட்டியினை முகம் கொள்ள வேண்டி நேரிட உள்ளது. ஆகவே, இது காலத்தின் கட்டாயம்; நாம் அனைவரும் ஒருமித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி வாக்களிப்பதன் மூலம் எமக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதுடன் அம்பாறை மாவட்ட தமிழர்களின் இருப்பை அழிக்க எண்ணும் அந்நிய சக்திகளுக்கெதிராக முன்னோக்கிச் செல்லலாம். இந்த கோட்பாட்டில் இருந்து சற்று தளர்வடைவோமானால் எமக்கனான அரசியல் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு அரசியல் அனாதை ஆகிவிடுவது மட்டுமின்றி, அந்நிய சமூகத்திடம் அரசியல் ரீதியில் அடிமை ஆகிவிடுவோம் .
இதனடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடான தன்னுடைய அரசியல் பிரவேசமானது குறிப்பாக புதிய தலைமுறைக்கு ஏற்றாற்போலும், தமிழ் மக்களின் அபிலாசைகளுடன் என்றும் இணைந்து பயணிக்கும் விதமாகவும் எனது அரசியல் கொள்கையானது "உறுதியான தமித்தேசிய வழியில் இணைந்த அபிவிருத்தி" என்ற வகையில் அமையப்பெற்றுள்ளது.
மக்கள் எதனை அவசிய தேவை என கருதுகிறார்களோ அதுவே அரசியல் இலக்காக அமைய வேண்டும்; மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி அவர்களுடைய அபிலாசைகளை முன்னிறுத்தி தனது அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் தற்போதைய தேவையாக முக்கியத்துவம் அளித்து கருதப்படவேண்டியது கல்வி, பொருளாதார மற்றும் சமூக மேம்பாடே ஆகும். இதுவே எம்மால் தற்காலத்தில் அடைய கூடிய சாத்தியமான இலக்காகும். இதனடிப்படையில் நலிவடைந்து போகின்ற எமது சமுதாயத்தின் கல்வி, பொருளாதர, சமூக மேம்பாடு மற்றும் அபிவிருத்தியே எனது பிரதான நோக்காக அமையப்பெறும்.
எனவே தற்காலத்திற்கு ஏற்ற வகையில் அரசியல் பாதையை கட்டமைத்து அரசியலில் புதிய திருப்பு முனையாக தான் அமைய எண்ணியுள்ளதோடு, இதனுடன் இணைந்து பற்றுறுதிமிக்க தமிழ்த்தேசிய பாதையில் தொடர்ந்தும் பயணித்து நிலைபேறான அபிவிருத்திக்கும் சாத்தியமான உரிமைக்குமான சமாந்தர அரசியல் நேர்கோட்டு பாதையில் தான் பயணிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக Dr இரா. சயனொளிபவன் கருத்து தெரிவித்தார்.

.jpg)