(சரவணன் ) காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இன்று புதன்கிழமை(30) பொலிசார் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் காத்தான்குடியில் 46 பேருக்கு தொற்றுதிப்படுத்தப்பட்டது என கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது
இன்று சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டபடி காத்தான்குடியிலுள்ள வர்தகர்கள் மற்றும் ஊமியர்கள் 665 பேருக்கும் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் 549 பேர் உட்பட 1214 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை இன்று அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் காத்தான்குடியைச் சேர்ந்த 24 பேருக்கும், ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 உட்பட 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 10 பேர் பரிசோதனைக்கு செல்லவில்லை அதேவேளை இதில் தொடர்புடையவர்களின் வர்த்தக நிலையங்களான ரெக்ஸ்ரையில்கள், பான்சி கடைகள், குழந்தைகளுக்கான் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் (பேபி) உட்பட் 17 கடைகளை சுகாதார அதிகாரிகள் மூடினர்.
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தொற்றாளர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வர்தகநிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்று திரும்பியவர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்





.jpg)



.jpg)
.jpg)
.jpg)

