ஊடகங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் செய்திகள் வெளிவராத நாளே இல்லை எனலாம். அதேபோன்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர உதவி அழைப்பு இலக்கமான 1929 இற்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தினந்தோறும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி 2019ம் ஆண்டில் மட்டும் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 294 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இவற்றில் 288 முறைப்பாடுகள் மிக மோசமான பாலியல் வல்லுறவு சம்பவங்களாகும். சிறுமிகள் மீதான இவ்வாறான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களினால் இளவயது கர்ப்பம், கருச்சிதைவு, சிறுபராயத்திலேயே தாய்மை அடைதல் போன்ற மேலதிக பாதிப்புகளை சிறுமிகள் எதிர்கொள்கின்றனர்.
2012 முதல் 2020 வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் 5891 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் 21.9 சதவீதம் அதிகரித்து வருவதாக யுனிசெப் நடத்திய அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இந்த தரவுகள் அனைத்துமே சிறுவர்கள் தொடர்பிலும் அவர்கள் பாதுகாப்பு தொடர்பிலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் விடயங்களாக உள்ளன.
சிறுவர்கள் தமக்குள் எந்தவொரு வேறுபாடுகளுமின்றி உரிமைகளை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையில் உள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கக் கூடியவாறான உரிமைகளும் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சித்திரவதை கொடூரமாக நடத்துதல் மற்றும் தண்டனைகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளும் உரிமை, சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை என்பன சர்வதே ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாகும்.
சிறுவர்களைப் பெரிதும் பாதிக்கும் துஷ்பிரயோகங்கள்:
சிறுவர்களை உடல் ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக பீதியடையச் செய்தல், பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல், புறக்கணித்தல், வர்த்தகம் அல்லது வேறு விடயங்களுக்காக அவர்களை சுரண்டுதல் போன்றவற்றின் மூலம் அவர்களின் ஆரோக்கியம் உயிர்வாழ்தல், வளர்ச்சி மற்றும் கௌரவம் போன்றவற்றுக்கும் பாதிப்பை ஏற்படுத்துதல் போன்றவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் எனப்படுகின்றன.
அதேபோன்று பெற்றோர் அல்லது பராமரிப்பாளரின் கவனயீனம், அவர்களின் அக்கறையற்ற தன்மையின் காரணமாக ஏற்படும் காயம், மரணம், உணர்ச்சி ரீதியான பாதிப்பு அல்லது ஒரு குழந்தைக்கு பாரிய தீங்கு ஏற்படக் கூடிய ஆபத்தான நிலை என்பனவும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் எனப்படுகின்றன.
இலங்கையில் சுமார் 80 சதவீதமான சிறுவர்கள் அறியாமையினாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர் என 'சேவ் த சில்ரன்' அமைப்பு கூறுகின்றது. இலங்கையில் உள்ள சிறுவர்கள் பாலியல் மட்டுமல்ல குடும்ப வன்முறைகளினாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர் துஷ்பிரயோகங்களில் அதிகமானவை நம்பிக்கைக்குரிய நெருங்கிய உறவினர்களாலே பெரும்பாலும் ஏற்படுத்தப்படுகின்றன என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது.

‘இவரால் பிள்ளைக்கு நிச்சயம் பாதிப்பு வராது’ என்று ஒருவரை முற்று முழுதாக நம்பி பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு செல்லும் போதே இவ்வாறான பரவலான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கொவிட் தொற்றினால் இலங்கை நாடளாவிய ரீதியில் முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் அதிகாரசபைக்கு கிடைத்திருந்தமையும் இங்கு கவனத்திற்குரிய விடயமாகும். நாடு முடக்கப்பட்ட நிலையில் பிள்ளைகள் ஒன்று பெற்றோருடன் இருந்திருப்பார்கள் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்திருப்பார்கள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக இங்கு அறிந்தவர்களினால், நெருங்கியவர்களினால் சிறுவர்களின் உரிமைகள் மீறப்பட்டிருந்தன என்பது தெளிவாகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் சிதைவுற்ற குடும்பங்களில்தான் அதிகம் இடம்பெறுகின்றன என்பது மற்றுமொரு உண்மையாகும். அதாவது குடும்பத்தாரால், தாய் அல்லது தந்தையால் கைவிடப்பட்ட பிள்ளைகள், குடும்ப வாழ்வாதார பிரச்சினைகளுக்காக வெளிநாடு செல்லும் பெற்றோரின் பிள்ளைகள்தான் அதிகம் பாலியல், உடலியல். உளவியல் ரீதியான கொடுமைக்கு ஆளாகுகின்றனர் என்று சிறுவர் உரிமைகள் தொடர்பாக செயற்படும் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சிறுவர்களை பாதுகாக்கும் சட்டங்களும், பாதுகாப்பும்:
பெற்றோரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு சிறுவர்களுக்கு உரிமை உண்டு. அதேவேளை பெற்றோரிடமிருந்து தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமையும் சிறுவர்களுக்கு உண்டு. ஆனால் தங்கள் உரிமைகள் மீறப்படுவதனைக் கூட அறியாத குரலற்ற, நலிவுற்ற தரப்பினராகவே பல சிறுவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் சிறுவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதா என்பது தொடர்பாக வினவிய பொழுது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரவூப் ஹக்கீம் கூறுகையில், “சிறுவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக எமது நாட்டில் மிகவும் கவனம் செலுத்தப்படுகின்றது. சர்வதேச சட்டம் ஒன்றிற்கு அமைவாக குறிப்பாக ஐ.நா சபையின் தீர்மானங்களை அடியொட்டி இங்கு தனியான சிறுவர் பாதுகாப்பு சட்டமூலம் ஒன்று அமுலில் இருக்கிறது.

இதனடிப்படையில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களுடைய பாதுகாப்பு குறித்த பல விவகாரங்களில் மிக கடினமான ஆழமான பல சட்ட நடைமுறைகள் இன்று அமுலில் இருக்கின்றன. குறிப்பாக இதனடிப்படையில் குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென அவர்களுக்கென பிரத்தியேகமான நீதிமன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உளரீதியான பாதிப்புகள் வராத அடிப்படையிலே இந்த ஏற்பாடுகளை எமது நாடு சட்டமூலமாக செயற்படுத்தி வருகின்றது” என்று குறிப்பிட்டார்.
“சிறுவர்களுடைய செயற்பாடுகளில் அவர்களுடைய பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக பொலிஸ் நிலையங்களில் கூட பிரத்தியேகமான பயிற்றுவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறிப்பாக சிறுவர்கள் பராமரிப்பு அதே போல பெண்களுடைய விவகாரங்களுக்கான பிரத்தியேக பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறார்கள். இவ்வாறான பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும் விசேடமானதாகும்” என்று ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை “சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக இலங்கையில் சட்டங்கள் போதுமானதாக இருந்தாலும், இச்சட்டங்களை சரியான முறையில் அமுல்படுத்துவதில் பிரச்சினைகள் உள்ளன” என்று ‘சேவ் த சில்ரன்ஸ்’ அமைப்பின் கொள்கை மற்றும் ஆய்வு இயக்குநர் ரன்ஞன் வெத்தசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “சிறுவர் தொடர்பான வழக்குகளுக்கான தீர்வினைப் பெறுவதற்கு ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை காத்திருக்க நேரிடுகின்றது. எனவே சிறுவர்களின் வழக்குகள் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்த வேண்டும்” என்றார் அவர். இதே கருத்தினை வலியுறுத்திய சட்டத்தரணி நதீஹா அப்பாஸ், “சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படுவதன் கடினத் தன்மை காரணமாக வழக்கு விசாரணைகள் தாமதமாவதால் தண்டனைகள் கொடுக்க போதுமான சான்றுகள் கிடைக்காமல் போகின்றன. பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஆராய்ந்து சாட்சி எடுக்கும் போது சிறுவர்கள் அச்சந்தர்ப்பத்தில் உண்மையைக் கூறினாலும், மேலும் சில காலத்துக்கு பின்னர் வேறு நீதிமன்றங்களில் சாட்சியத்தை விசாரிக்கும் போது பாதிக்கப்பட்ட பிள்ளை நடந்த சம்பவத்தை மறந்து போகின்றது. எனவே இதனால் பாதிக்கப்பட்டவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்க முடியாமல் போகின்றது” என்று குறிப்பிட்டார்.
சிறுவர்களுக்கான சட்டம், பாதுகாப்பு, உரிமைகள் என்பன இலங்கையில் இருந்தாலும் நடைமுறையில் அவை சிறப்பாக அமுலாக்கப்படல் வேண்டும் என்று சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் மேலும் வலியுறுத்தினார். குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு பல வருடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதால், பெரிய அளவில் வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கின்றன.