திருமதி. அருளம்மா சற்குணராஜா இலங்கை அதிபர் சேவை தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.



மட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் பிரதி அதிபராக கடமையாற்றி சேவை ஓய்வு பெற்றுள்ள திருமதி. அருளம்மா சற்குணராஜா அவர்களுக்கு 05.10.2018 இல் இருந்து இலங்கை அதிபர் சேவை தரம் I இற்கு பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.

ஓந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த இவர் சுமார் 30 வருடங்கள் ஆசிரியர் சேவையிலும் 08 வருடங்கள் அதிபர் சேவையிலும் கடமையாற்றியவர் என்பதுடன் மட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக மட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் ஆரம்பப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி அதிபராக இருந்து மிகச் சிறந்த முறையில் கடமையாற்றி 20.11.2019 இல் சேவை ஓய்வு பெற்றிருந்த இவருக்கு தற்போது இப்பதவி உயர்வு கிடைத்தமையையிட்டு பாடசாலையின் கல்விச் சமூகம் மிக்க மகிழ்ச்சியடைவதோடு இவரை பாராட்டி கௌரவிப்பதில் பெருமிதம் அடைகிறது.