சிறுவர் உரிமைகளும் பாதுகாக்கும் சட்ட ஏற்பாடுகளும்


அறிமுகம்

ஏதிர்கால உலகம் இன்றைய சிறுவர்களில் தங்கியுள்ளதால் ஒவ்வொருவரும் சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பது தெளிவாகின்றது. சிறுவர்கள் தங்களது உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய சிறப்பான நிலை நிலவினாலேயே எதிர்கால உலகு ; அமைதியாகவும், சுபீட்சமாகவும் காட்சியளிக்கும். சிறுவர்கள் பூப்போன்றவர்கள். இதனால்தான் சிறுவர் உரிமை தொடர்பாக அதிகம் பேசப்படுகின்றது. சிறுவர் உரிமை தொடர்பாக சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் பல சமவாயங்களும், சட்ட ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. சிறுவர் உரிமை பற்றிய சமவாயத்தில் 18 வயதிற்குட்பட்ட அனைத்து மனிதப் பிறவிகளும் சிறுவர் என வரையறுக்கப்படுகின்றது. அத்துடன் இச்சமவாயம் ஒவ்வொரு நாடும் தமது நாட்டில் வெவ்வேறான வயதெல்லையை வைத்திருப்பதற்கு அனுமதிக்கிறது. சர்வதேச ரீதியாக 1924 ஆம் ஆண்டு ஜெனீவா சிறுவர் உரிமை பிரகடனம் உருவாக்கப்பட்டபோதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் சிறுவர் உரிமைகள் தொடர்பாக கூறப்பட்டபோதிலும் அவை போதாமையினால் 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் உருவாக்கப்பட்டது. இது 1990 இல் நடைமுறைக்கு வந்தது. இச் சமவாயத்தை இலங்கை 1991 இல் ஏற்று அங்கீகரித்துள்ளது. சிறுவர்களின் உரிமைகளை குறிப்பிடுகின்றது.


சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயங்கள்

சிறுவர் சமவாயமானது சிறுவர்களின் பல்வேறு உரிமைகளையும் சுட்டிக்காட்டுகின்றது. உறுப்புரை 2 பாகுபாடு காட்டாமை அதாவது இன, மத, மொழி, சாதி, பால், வர்க்க, நிற போன்ற வேறுபாடுகள் காட்டப்படாமல் அனைத்து சிறுவர்களும் தங்களது உரிமைகளை அனுபவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றது. 

உறுப்புரை: 9 பெற்றோரை பிரிதல், இம்சை, புறக்கணிப்பு ஏதாவது ஏற்பட்டாலே பிரிந்து வாழ்வார்கள். தாய் அல்லது தந்தையிடம் இருந்து பிரிந்தாலும் அவர்களுடன் உறவினை ஏற்படுத்த முடியும். ஏனைய எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றேருடன் வாழும் உரிமை சிறுவர்களுக்கு உண்டு. 

உறுப்புரை: 13 கருத்துச் சுதந்திரம் பிறரின் உரிமைகளை மீறாத வகையில் தமது எண்ணங்களை தங்குதடையின்றி வெளியிடவும் தகவல் பெறவும், தன் கருத்தை அல்லது தகவலைத் தெரியபடுத்தவும் ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமை உண்டு.

உறுப்புரை: 14 சிந்தனை, மனச்சாட்சி, மதச்சுதந்திரம்: பெற்றோரின் முறையான வழி நடத்தலுக்கும் தேசிய சட்டத்திற்கும் அமைய சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச்சுதந்திரம் ஆகியவற்றை வெளிப்படுத்த  ஒவ்வொரு பிள்ளைக்கும் உரிமை உண்டு.

உறுப்புரை: 15 கூடும் சுதந்திரம் பிறரின் உரிமைகளை மீறாத வகையில் பிறருடன் சேர்வதற்கும், சங்கங்களை அமைத்தல் அல்லது அவற்றில் அங்கம் பெறுவதற்கும் சிறுவர்களுக்கு உரிமை உண்டு.

உறுப்புரை: 24 சுகாதாரமும் சுகாதார சேவைகளும், மிக உயர்ந்த தராதரமுடைய சுகாதாரத்தையும், பராமரிப்பையும் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு.

உறுப்புரை: 28 கல்வி பயிலும் உரிமை எல்லாப் பிள்ளைகளுக்கும் உண்டு. அரசாங்கத்தின் கடமை ஆரம்பக்கல்வியையாவது அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

உறுப்புரை: 30 தமது சொந்தக் கலாச்சாரத்தை அனுபவிக்கவும் தமது சொந்த மதம், மொழி ஆகியவற்றைப் பயிலவும் சிறுபான்மை இனத்தவர்களின் பிள்ளைகளுக்கு உரிமை உண்டு.

உறுப்புரை: 32 ஆனது பொருளாதார ரீதியான சுரண்டலிலிருந்தும், ஆபத்தான, கல்வியை பாதிக்கக் கூடிய மற்றும் ஆரோக்கியம், உடல், உளம் மற்றும் அறவொழுக்கம் என்பவற்றை பாதிக்கக்கூடிய வேலைகளிலிருந்தும் பாதுகாப்பை பெறும் உரிமை சிறுவருக்கு உள்ளது. உறுப்புரை: 34 ஆனது விபச்சாரம் மற்றும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் என்பவைகளிலிருந்து பாதுகாப்பை பெறும் உரிமை சிறுவருக்கு உள்ளது.

உறுப்புரை: 37 சித்திரவதை, எந்தப்பிள்ளையும்  துன்பம், தண்டம், சட்ட விரோத கைது அல்லது சுதந்திரத்தை மறுத்தல் ஆகியவற்றிற்கு ஆளாக்கப்படலாகாது.

சர்வதேச தொழில் தாபனத்தின் சமவாயங்கள்: தொழில் தொடர்பான ஆகக்குறைந்த சர்வதேச தராதரங்களை விதந்துரைக்கின்றன. சிறுவர்களை வேலைக்கமர்த்தலை இல்லாதாக்குவதற்காக ஆக்கப்பட்ட முக்கிய சமவாயங்களாக  1973 ஆம் ஆண்டு 138ஆம் இலக்க ஆகக் குறைந்த வயது பற்றிய சமவாயமாகும். இதனை இலங்கை 2000ஆம் ஆண்டு ஏற்று அங்கிகரித்துள்ளது. 1999ஆம் ஆண்டு 182 ஆம் இலக்க சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகள் பற்றிய சமவாயம். இதனை 2001 ஆம் ஆண்டு இலங்கை அங்கிகரித்துள்ளது.

ஜக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையும் சிறுவர்களின் உரிமைகளுக்காக பலத்த குரல் எழுப்புகின்றது. குறிப்பாக போரில் சிறுவர்களை ஈடுபடுத்தல், கடத்தல், கொலை செய்தல், பாலியல் துஸ்பிரயோகம் போன்றவற்றை தடுப்பதற்காக, சிறுவர் உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளின் மீது விமர்சனங்களையும், விசாரனைகளையும், தடைகளையும் விதித்து வருகின்றது.

2001ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க சர்வதேச சிறுவர் கடத்தல் சம்பந்தமான குடியியல் சமவாயம்;. சிறுவர்கள் கடத்தப்படுவதற்கு எதிராக போராடி வருகின்றது.


சிறுவர் உரிமைகள் தொடர்பான இலங்கைச் சட்டங்கள்

தண்டனைச் சட்டக்கோவை(1995 ஆம் ஆண்டு 22ம் இலக்கச்சட்டம், 1998ம் ஆண்டு 29ம் இலக்க திருத்தச் சட்டம்)

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச்சட்டம்: 1998 ஆம் ஆண்டு 50ஆம் இலக்கச் சட்டம்.

பராமரிப்புச் சட்டம்

சிறுவர் இளம் பராயத்தவர் பெண்கள் தொழிற்சட்டம் (1956 ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க சட்டம்)

தொழிற்சாலைக் கட்டளைச் சட்டம்- (1935 ஆம் ஆண்டின் 14 இலக்க சட்டம், 1999ஆம் அண்டின் 56 ஆம் இலக்க திருத்தச் சட்டம்)

சிறுவர் இளம்பராயத்தவர் கட்டளைச் சட்டம்

சிறுவர் இளம்பராயத்தவர்(தீங்குமிக்க வெளியீடுகள்) சட்டம்

வேலையாட்கள் விசேட படிகள் சட்டம்

தொழிலாளர் நட்ட ஈட்டு கட்டளைச் சட்டம்

ஆபாச வெளியீடுகள் கட்டளைச் சட்டம்

சிறுவர் மகவேற்புக் கட்டளைச் சட்டம்- 1992 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க சட்டம்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு- 1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டம்- சிறுவர் உரிமை மீறல்களை விசாரனை செய்தல்.


தண்டனைச் சட்டக்கோவை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம், பராமரிப்புச் சட்டம் என்பவற்றில் 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறுவர்கள் எனக் கூறப்படுகின்றது. ஆனால் சிறுவர் இளம்பராயத்தவர் பெண்கள் தொழிற்சட்டம், தொழிற்சாலைக் கட்டளைச் சட்டம், சிறுவர் இளம் பராயத்தவர் கட்டளைச் சட்டம், கடை காரியாலய சட்டம் என்பவற்றில் 14 வயதிற்குட்பட்;டவர்கள் சிறுவர்களாகும்.


12 வயதிற்குட்பட்ட சிறுவரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கைவிடல், ஆபத்திற்கு உள்ளாக்குவார்களாயின் குற்றவியல் கோவை பிரிவு 308 இன் அடிப்படையில் 7 வருடங்களுக்கு மேற்படாத சிறை அல்லது தண்டம் அல்லது இரண்டிற்கும் உள்ளாக வேண்டிவரும்.

18 வயதிற்குட்பட்ட சிறுவரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் தாக்குதல், தவறாக நடாத்துதல், கைவிடல் ஆகியனவற்றை மேற்கொள்வார்களாயின்; தண்டணைச் சட்டக்கோவை கோவை பிரிவு 308அ இன் அடிப்படையில் ஆகக் குறைந்தது 2 வருட சிறை கூடியது 10 வருட சிறை அத்துடன் தண்டமும் நட்ட ஈடும் செலுத்த வேண்டி ஏற்படும் 

சிறுவர்கள் ஆபாச படங்களில் தோன்ற காரணமாக இருப்பின் தண்டனைச் சட்டக்; கோவை பிரிவு 286அ(1) ஏற்பாட்டின் படி 2 வருடத்திற்கு குறையாததும் 10 வருடத்திற்கு மேற்படாததுமான சிறைத்தண்டனையும், நட்ட ஈடும் செலுத்த வேண்டும்.

சிறுவர்களை பாலியல் நடவடிக்கையில் பங்குகொள்ள அனுமதித்தல், விளம்பரம் ஊடாக தூண்டுதல் ஆகிய குற்றங்களைப் புரிவார்களாயின் தண்டனைச் சட்டக்; கோவை பிரிவு 360ஆ இன் அடிப்படையில் 5 வருடத்திற்கு குறையாததும் 20 வருடத்திற்கு அதிகரிக்காததுமான தண்டனை வழங்கப்பட வேண்டும்.


16 வயதிற்குட்பட்டவருடன் சம்மதமுடனோ அன்றி சம்மதம் இன்றி பாலியல் உறவுகொண்டால் தண்டனைச் சட்டக்; கோவை பிரிவு 363 இன் படி 10 வருடத்திற்கு குறையாமலும் 20 வருடத்திற்கு அதிகரிக்காத சிறைத்தண்டனையும், நட்டஈடும் வழங்க வேண்டும்.

தண்டனைச் சட்டக்கோவையானது கட்டாய வேலை மற்றும் அடிமையாக வைத்திருத்தல், விபச்சாரம், ஏனைய வகையான பாலியல் சுரண்டல்கள் என்பவைகளுக்காக சிறுவர்களை ஆட்சேர்ப்பது, கொண்டு செல்வது மற்றும் வைத்திருப்பது தண்டனைக்குரிய வஞ்சகக் கடத்தல் குற்றமாகும். 2005ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட வஞ்சகக்கடத்தல் சமவாயச் சட்;டமானது சிறுவரை ஏமாற்றி விபச்சாரத்திற்காக வஞ்சகக்கடத்தல் செய்வதனை குற்றத் தவறு என்கிறது.

தண்டனைச் சட்டக் கோவையானது சிறுவர்களை பிச்சையெடுத்தல்,288(1) தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதில் ஈடுபடுத்தல்288ஆ(1) மற்றும் ஆயுதப் போரில் ஈடுபடுத்தல் ஆகியவைகள் தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும்.

சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும்போது அது பற்றிய முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் நலன்சேவைகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் என்பவைகளுக்குச் செய்யலாம்.


சிறுவர்களை பாதுகாப்பதற்காக இலங்கையில் காணப்படும் ஏற்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தனது நடவடிக்கைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரித்து தனது ஊழியர்கள் மூலமாக சிறுவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது. உரிமைகள் மீறப்படும்போது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கின்றது.

ஓவ்வொரு பொலிஸ் நிலையங்கங்களிலும் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அவர்கள் மீதான வன்முறைகளை விரைவாக விசாரணை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச சிறுவர் நிதியம்(ருniஉநக)இ ளுயஎந வாந உhடைனசநn போன்ற சர்வதேச நிறுவனங்கள் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு பல்வேறு வகைளான உதவிகளை வழங்குவதோடு, கடத்தல், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகுபவர்களுக்கு சட்ட ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குகின்றது.

சர்வதேச சிறுவர் தினம் விமர்சையாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகின்றது.

இலவச கட்டாயக்கல்வி முறை நிலவுகின்றமை. கல்விக் கட்டளைச் சட்டம்(1997 ஆம் ஆண்டின் 1 இலக்கம்) 5 – 14 கட்டாயக்கல்வி(1997-1003ஃ05) 

சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகும்போது அது தொடர்பில் உடனடியாக 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி உதவியை பெற முடியும்.

முடிவுரை

உலகில் சிறுவர்களை பாதுகாப்பதற்காக பல சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டபோதிலும், சிறுவர் உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்து கொண்டே உள்ளது.  குறிப்பாக இலங்கையில் வீட்டு வன்முறைகள், பாலியல் துஸ்பிரயோகம், போதைப் பொருள் கடத்தல், யாசகத்திற்குப் பயன்படுத்தல் என பலவித உரிமை மீறல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வித்தியா என்ற பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை, சேயா என்ற சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை, கிசாழினி என்ற  மலையக சிறுமி வீட்டு வேலைக்கென அழைத்துவரப்பட்டு மர்மமான வகையில் உயிரிழந்தமை என நூற்றுக்கணக்கில் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றமை பெற்றோர் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.


                 மனோகரன் பிரதீபன் BA.Hons,LLB

                 ஆசிரியர்,

                 மட்ஃமமேஃமகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயம்,

                 மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, 

                 மட்டக்களப்பு.