மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த தொழிலாளியொருவரின் சடலம் சவுதி அரேபியா ஜித்தாவில் மீட்கப்பட்டுள்ளது.
ஜித்தாவிலுள்ள வீடொன்றில் சாரதியாக தொழில் புரிந்து வந்த நிலையில் குறித்த நபர் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடியை பிறப்பிடமாகவும் பூநொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31வயதுடைய முகம்மட் மபாஸ் என்பவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருட காலத்தை நிறைவு செய்த பின்னர் அடுத்த மாதம் 10ம் திகதி நாட்டுக்கு வருகைதர இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.




.jpg)



.jpg)
.jpg)
.jpg)

