கிழக்கிலங்கையில் தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா கொடி இறக்க திருவிழா நேற்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டு அம்பாறை மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இவ்வாலய வருடாந்த திரு விழாவின் நவ நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நேற்று மாலை ஆலயப் பங்குத் தந்தை தலைமையில் ஆலய பங்கு மக்களினால் திருவுருவ சுற்றுப்பிரகாரப் பவனி கொரோனா அச்சம் காரணமாக ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.மட்டு அம்பாறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இறுதி நாள் திருவிழாவில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் சுகம் பெற வேண்டியும் அரசாங்கத்திற்கு நல்லாசி வேண்டியும் இங்கு விசேட கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வான ஆலய பங்குதாரர்களால் கடந்தமாதம் 28ம்திகதி ஏற்றப்பட்ட கொடி ஆலய பங்கு தந்தை ஏ.ஸ்ரனிஸ்லோஸ் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின் கொடி இறக்கம் இடம்பெற்றது.







.jpeg)




