பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லையை வெளியிட்ட கல்வியமைச்சு!
அரச சேவையில் எந்தவொரு பதவியிலும் பணியாற்றும் 40 வயதுக்கு உட்பட்ட எந்தவொரு பட்டதாரியும் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்விப் பொது தராதர உயர்தரத்துக்கு அதிகப்படியான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளுக்கு இந்த ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பியதன் பின்னர் ஏனைய வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.