அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்றவர்கள் மட்டக்களப்பு DCDB பிரிவினரால் கைது .


நேற்று காலை அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் ஒன்றையும், அனுமதிபத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் ஒன்றையும் அதன் சாரதிகளுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் .

கித்துல் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றஜிக்காந்தன் தலைமையிலான குழுவினர் சாரதிகளை கைது செய்து கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் .