கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து ஆணழகன் போட்டிக்கு (60-65) நிறை பிரிவுக்கு தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.எல்.எம்.ஸப்ராசுக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இயங்கும் ஓரியன்ட் பிட்னஸ் உடற்பயிற்சி நிலையம் சார்பில் இவ் ஆண்டுக்கான ஆணழகன் தேசிய மட்ட சுற்று போட்டிக்கு தெரிவாகியுள்ள எம்.எல்.எம்.ஸப்ராஸை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் நேற்று பிரதேச செயலகத்தில் வரவேற்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தேசிய மட்ட போட்டி இன்று 04.08.2023 வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் கொழும்பு டொயில்டென்ட் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் கல்குடா சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றியையும் கௌரவத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் அத்தோடு எமது கல்குடா கராத்தே விளையாட்டு கழகம், ஏனைய கழகங்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கல்குடா கராத்தே விளையாட்டு கழக தலைவர் மௌலவி ஏ.ஆர்.நவாஸ் தெரிவித்தார்.







.jpg)



.jpeg)
.jpeg)
