ஐந்து மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்று சாதனை !2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஐந்து மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் www.doenets.lk / www.results.exams.gov.lk பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

நாடளாவிய மற்றும் மாவட்ட ரீதியிலான தரவரிசையில் இம்முறை வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனைத்து மாவட்டங்களுக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கான மாவட்ட வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.