நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 60 ,122 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
அத்துடன், கடந்த மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. ரஸ்யாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
இதன்படி, ரஸ்யாவில் இருந்து 8,755 சுற்றுலாப்பயணிகளும், இந்தியாவில் இருந்து 8,369 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,423 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.