கொத்துவின் விலை 1900/- விற்பனையாளர் கைது !வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தெரு உணவு விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தினம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இடியப்ப கொத்து ஒன்றின் விலை 1,900 ரூபாய் என சந்தேகநபர் குறிப்பிடும் நிலையில், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கடை உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

இதனை குறித்த சுற்றுலாப் பயணி தனது கெமராவில் பதிவு செய்த நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியதை தொடர்ந்து சந்தேகநபரான தெரு உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.