மது அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்றவர் போட்டி முடிந்த சில மணி நேரத்தில் உயிரிழப்பு !மது அருந்தும் போட்டியில் முதலிடம் பெற்ற நபர் ஒருவர் போட்டி முடிந்த சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். அட்டன் பிரதேச தோட்டமொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது !

அட்டன் பிரதேச தோட்டமொன்றின் கோவிலில் தேர் திருவிழாவின் பின்னர் இளைஞர்கள் குழு ஒன்று கூடி மதுபானம் அருந்தும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் . பல இளைஞர்கள் போட்டியில் கலந்துகொண்டனர், அவர்களுக்கு தலா 750 மில்லி போத்தல்கள் வழங்கப்பட்டன . குறைந்த நேரத்தில் குடித்து முடித்த போட்டியாளர் வெற்றி பெறுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது .

முதலில் பந்தயத்தை முடித்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நபர் சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு போட்டியாளர் கடுமையாக சுகவீனமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.