சட்டமூலங்களின் பரிசீலனைக்கு உறுப்பினர்கள் நியமனம் : சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு !





“சவீர மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம்

“சவீர மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு அனுப பஸ்குவல், (கலாநிதி) சரத் வீரசேக்கர, (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், லலித் வர்ண குமார, ரோஹண பண்டார, அசங்க நவரத்ன மற்றும் உதயன கிரிந்திகொட ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களை மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.



“தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)” சட்டமூலம்

“தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு ஜீவன் தொண்டமான், தாரக்க பாலசூரிய, அநுராத ஜயரத்ன, (திருமதி) டயனா கமகே, புத்திக பத்திறண, மொஹமட் முஸம்மில், (திருமதி) முதிதா பிரிஸான்தி மற்றும் கெவிந்து குமாரதுங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலதிக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



“களனி பௌத்த மகளிர் தருமச் சங்கம் (கூட்டிணைத்தல்)" சட்டமூலம்

“களனி பௌத்த மகளிர் தருமச் சங்கம் (கூட்டிணைத்தல்)" எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு விதுர விக்ரமநாயக, பிரசன்ன ரணவீர, கயந்த கருணாதிலக்க, (பேராசிரியர்) சன்ன ஜயசுமன, கே. சுஜித் சஞ்ஜய பெரேரா, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான மற்றும் (திருமதி) மஞ்சுலா திசாநாயக ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலதிக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.



“சமாதி சுகாதார சேவைகள், சுற்றாடல், விவசாய, கலாசார, மற்றும் விளையாட்டு நிலையம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம்

“சமாதி சுகாதார சேவைகள், சுற்றாடல், விவசாய, கலாசார, மற்றும் விளையாட்டு நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் சாந்த பண்டார, அனுப பஸ்குவல், கௌரவ அஸோக அபேசிங்ஹ, சட்டத்தரணி எஸ். எம். எம். முஸ்ஸாரப், கருணாதாஸ கொடிதுவக்கு, கிங்ஸ் நெல்சன், ரோஹண பண்டார மற்றும் நிபுண ரணவக ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.



“சமாதி தியான மற்றும் யோகாசன நிலையம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம்

“சமாதி தியான மற்றும் யோகாசன நிலையம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென விதுர விக்கிரமநாயக்க, பிரமித பண்டாற தென்னகோன், விஜித பேருகொட, கௌரவ ஆஸோக அபேசிங்க, சஞ்சீவ எதிரிமான்ன, கருணாதாச கொடிதுவக்கு, கிங்ஸ் நெல்சன் மற்றும் ரோஹன பண்டாற ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 (2) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.


குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வழிவகைகள் பற்றிய குழு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124 இன் ஏற்பாடுகள் மற்றும் 2024 பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தயாசிறி ஜயசேக்கர அவர்களும் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயர் அறிவித்தார்.


ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்கள் 2023 நவம்பர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை பற்றிய விடயம் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அத்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹண பண்டார அவர்கள் 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை பற்றிய விடயமும் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அவர்கள் 2024 பெப்ரவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை பற்றிய விடயம் தொடர்பிலும் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அவர்கள் 2023 நவம்பர் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமை பற்றிய விடயமும் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் அறிவித்தார்.