சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு ஒத்திவைப்பு !


சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 6 மாத கால சேவை நீடிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் பரிந்துரையின் ஒப்புதலை அரசியலமைப்பு பேரவை ஒத்திவைத்துள்ளது.

இது தொடர்பான பிரேரணை நேற்று கூடிய அரசியலமைப்பு பேரவையில் முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக் காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சேவையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 18ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடவுள்ளதுடன், சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.