எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மின் கட்டணம் 30% குறைப்பு: அமைச்சர் காஞ்சன விஜேசேகர !


எதிர்வரும் 18ஆம் திகதி அமுலாகும் வகையில் மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை தெனியாய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே இந்த மின் கட்டண குறைப்பு அமுலாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.