சுவசெரிய சேவைக்கு 95 புதிய ஆம்புலன்ஸ்கள் !


1990 சுவசெரிய அறக்கட்டளை 95 புதிய ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகப் பெறுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் TATA Sons (Pvt) Ltd இலிருந்து பெறப்பட்ட 297 ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தி “1990 Suva Sariya Foundation” தொடங்கப்பட்டது.

இதற்காக இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 25 ஆம்புலன்ஸ்கள் உட்பட 322 ஆம்புலன்ஸ்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது இச்செவைக்கு 450 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 25 பேக்-அப் ஆம்புலன்ஸ்கள் தேவை என அடையாளம் காணப்பட்டு தற்போது 150 ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறையாக உள்ளது.

அதன்படி, இந்தியாவின் TATA Sons (Pvt) Ltd நிறுவனம் 50 ஆம்புலன்ஸ்களை இலவச மானியமாகவும், Asia Development Bank 45 ஆம்புலன்ஸ்களை மானியமாகவும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.

மேற்படி அம்புலன்ஸ் வண்டிகளை ‘1990 சுவசெரிய அறக்கட்டளைக்கு’ பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர்கள் சபை அங்கீகாரம் வழங்கியது.