கலாசாரமும் சமூகமயமாக்கமும்
சமூகமயப்படுத்தும் செயற்பாட்டை சமூகத்தில் ஆற்றும் முகவர்களாக சமூக நிறுவனங்கள் காணப்படுகின்றன. சமூக நிறுவனங்கள் என்பது ஒரு சமூகத்தின் பொதுவான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகளின் தொகுப்பைப் பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பாக அமையும் அமைப்புக்களாகும். ஒரு சமூகத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்களுக்கு பொதுவான விதிமுறைகள், மரபுகள், குறியீடுகள் மற்றும் நடைமுறைகள் உள்ளிட்ட வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை இவை கடத்துகின்றன. சமூகமயமாக்கல் என்பது பிறப்பு, இறப்பு மூலமாக மரபணுக்களில் இருந்து, அவர்கள் வாழும் சமூகத்தின் நெறிகள், பழக்கவழக்கங்கள், மதிப்புகள் மற்றும் பாத்திரங்களை கற்பிக்கின்றது. மனிதனையும் அவனது பண்பாட்டினையும் இணைக்கின்ற செயற்பாடாக இது விளங்குகின்றது. சமூகத்தில் உள்ள விழுமியங்கள், வழக்காறுகள், நாட்டார் வழக்காறுகள் போன்றவற்றை அறிந்து மனத்தின் ஒருபகுதியாக இது மாறுகிறது. மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையே ஒரு சரியான இணக்கத்தை உருவாக்குவதே சமூகமயமாதலின் நோக்கமாகும்.
இன்று உலகளாவிய ரீதியில் பல சமூகங்களிலும் பல்வேறுபட்ட கலாசாரங்கள் பேணப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது. ஒவ்வொருவரும் தமது கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகம் முழுவதும் கலாச்சாரமானது வேறுபட்டுக் காணப்பட்ட போதிலும் நவீன உலகில் ஒரு கலாச்சாரம் பிற கலாச்சாரத்தில் ஊடூருவிக் காணப்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.
கலாச்சாரம் என்பது மொழி, மதம், உணவு வகைகள், சமூகப் பழக்கவழக்கங்கள், இசை மற்றும் கலைகளை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பண்புகள் மற்றும் அறிவு எனலாம். சமூகமயமாக்கல் மூலம் கற்றுக் கொள்ளப்படும் நடத்தைகள் மற்றும் தொடர்புகளின் பகிரப்பட்ட வடிவங்கள், அறிவாற்றல் கட்டமைப்புகள் மற்றும் புரிதல் கலாச்சாரமாகும்.
அந்தவகையில் எமது சர்வதேச ரீதியிலான இச்சமூக கட்டமைப்பில்
*. மேற்கத்திய கலாசாரம்
*. கிழக்கு கலாசாரம்
* தமிழர் கலாசாரம் என மூன்று வகைகள் உண்டு .
இதற்கு மேலும் பல கலாசார பிரிவுகள் இருப்பினும் எமது தமிழ் கலாசாரத்துடன் அதிகம் கலந்துவிடுகின்ற ஒன்றாக அமைவது மேற்கத்திய கலாசாரம் அகும். இங்கு மேற்கத்திய கலாச்சாரம் “என்பது ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரத்தையும், அமெரிக்கா போன்ற ஐரோப்பிய குடியேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டூுள்ள நாடுகளின் கலாச்சாரத்தையும் வரையறுக்கின்றது”. மேற்கத்திய கலாச்சாரத்தின் பிற கலப்புகளாக லத்தீன், செல்டிக், ஜெர்மானிய மற்றும் ஹெலனிக் இன மற்றும் மொழியியல் குழுக்களும் அடங்கும். இன்று, மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படுகின்றன.
அதனடிப்படையில் இன்றைய 21ம் நூற்றாண்டில் தமிழர் சமூகத்தின் கலாசார ரீதியான மாற்றங்கள் என்பது எமது கண்முன்னேயே காண முடிகின்றது . அந்தவகையில் வெளிநாட்டவர்களுடன் ஏற்பட்ட உறவுகள் காரணமாக எமது பண்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை பலராலும் மையக்கருத்தாகக் கொண்டுூ விமர்சிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த கலாச்சார மாற்றத்திற்கான ஒரு காரணியாக சமூகமயமாக்கலும் அமைகின்றது .
EMILE DURKHEM . , சமூக மயமாக்கல் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். ” மக்கள் ஒரு சமூகக் குழுவில் உறுப்பினர்களாக செயற்படுகின்ற வகையில் செயல், நோக்கம், அறிவு, மொழி, திறன்கள், விழுமியங்கள், விதிமுறைகள், வாழ்வின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றை பெறும் வகையிலான ஒரு செயற்பாடே சமூகமயமாக்கல்” அகும். அதாவது மனித நடத்தை மாற்றங்களுக்குக் காரணமாக அமைவதே சமூகமயமாக்கல் ஆகும். இச் செயன்முறையின் மூலம் ஒரு தனிநபர் தனக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள உலகம் குறித்த அறிவையும் ௮ச் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனையும் கற்றுக் கொள்கிறார். சமூகமயமாக்கம் ஒரு தொடர்ச்சியான மற்றும் வாழ்நாள் முழுவதும் இடம்பெறும் செயன்முறையாகும்.
இது சமூக வாழ்வில் நிபுணத்துவம் அடைய உதவுகிறது. சமூகமயமாக்கல் விரிவடையாது போனால் வளர்ச்சியின் அடுத்த கட்டம் தோன்றாது, சிதைவுகள் தடூக்கப்படாது. ஆகவே இவ்வாறான ஒரு முதிர்ந்த ஆளுமையின் வெளிப்பாடாக இது அமைகிறது. மேலும் இந்த சமூகமயமாக்கல் ஒரு குறிப்பிட்ட வழியில் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதோடு மானுடர்களை அடிப்படையாகக் கொண்ட இயக்கவியல் மூலம் அனைவருக்கும் பொதுவான அறிவினை உருவாக்குகிறது. அதனடிப்படையில் சமூகமாகமயமாக்கலினூடாக மாற்றங்கள் நிகழ்கின்றன. அதில் கலாசாரம் மாற்றமும் ஒன்றாகும்.
எமது இலங்கை நாட்டினை எடூத்துக்கொண்டோமெனில் இங்கு பன்மைத்துவ கலாசாரம் காணப்படுகின்ற நாடு ஆகும் . இங்கு சிங்களவர் ,தமிழர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பிரதானமாக நான்கு இனத்தவர்கள் வாழ்கின்றனர் . அவர்களுக்கென்று ஒரு தனித்துவமான கலாசாரம் காணப்படுகின்றது .அதனை எப்போதும் பாதுகாப்பதற்கு தான் மக்கள் விரும்புகின்றார்கள். எனினும் தற்போதைய காலத்தில் நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்பவும் இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் புதிய சமூகம் தனக்கென்று ஒரு நடை உடை பாவனை கலாசாரம் என மாற்றம் அடைந்துள்ளன. இதனைப் பற்றிய பல ஆதரவானதும் எதிரானதுமான கருத்துக்கள் நிறைவுகின்றன.
எமது இலங்கையினை பொருத்தமட்டில் இதனை அழமாக நோக்க வேண்டிய தேவை அமைகின்றது . அந்த வகையில் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கோட்பாட்டூக்கிணங்க சமூகமயமாக்கல் பல நல்ல மாற்றங்களையும் கலாச்சாரத்தில் ஏற்படுத்தி உள்ளது. கடல் கடந்து கூட தமிழர் தம் பண்பாடூ கலாச்சாரத்தினை எடுத்து பரப்புகின்றதாக சமூகமயமாக்கல் அமைக்கின்றது. அதாவது ஏனைய சமூகத்துடனான தனிமனித தொடர்பு என்பது இன்றைய காலத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இத்தொடர்பானது தொலைவில் உள்ள வேற்று மொழி ,வேற்று கலாசாரம் கொண்ட மக்களுடன் தொடர்பு கொள்வதையும் குறிக்கின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எமது கலாச்சாரத்தினை புதியதொரு இடத்தில் அறிமுகம் செய்ய முடியும். இதனால் எமது பண்பாடு மதிக்கப்படுகின்றது. வெளிநாட்டவர்கள் எம்மை போன்று கலாசார ஆடைகளை அணிவது .எமது கலாசார நிகழ்வுகளிலே பங்கு கொள்வது என்று மேற்குலக மக்களின் விருப்பத்தினை வென்றதாக எமது நாட்டின் கலாசார பண்பாட்டூ வாழ்வியல் அம்சங்கள் காணப்படுகின்றன. இதனைப்பற்றி எண்ணும் போது பெருமிதமாகத்தான் இருக்கிறது.
இருந்தும் இவற்றில் வேற்று கலாசாரம் கலந்து அவை எமது பண்பாட்டினில் ஒன்றிணைந்து விட்டமையானது பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியம் கொண்டதாக அமைந்துள்ளன என்ற முடிவுக்கு எம்மால் வர முடியாது. ஏனென்றால் இன்றைய பல சமூக சீரழிவுக்கு வேற்றுக்கலாசாரமும் ஒரு காரணியாக தான் உள்ளது . கூறப்போனால் கலாசார சீரழிவு என்பது தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு வேற்று கலாசார ஊடுூருவலும் ஒன்றாகும்.
இதனை அன்றாட வாழ்வில் நாம் காணும் பல விடயங்களின் மூலம் அறியலாம். தற்போது ஆடைகள் பற்றி நாம் எடுத்துக் கொண்டோமெனில் இளைஞர் யுவதிகளிடம் மேலைத்தேய ஆடை மோகத்தினால் தமிழ் பண்பாட்டினை மறந்துள்ளனர் . இதனால் எமது சமூகத்திற்கு சற்றும் பொருந்தாத வகையிலான ஆடைகள் அணிவதன் மூலம் அவை சமூக சீர்கேட்டிற்கு வழி வகுக்கின்றன . பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்பட்டாலும் அவை நம் வாழும் சூழலுக்கும், பொருத்தமானதா என்று சிந்திக்க வேண்டும். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முடியும் தமிழ்மொழியும் அதனுடன் தமிழர் தம் பண்பாடும் வளக்கலாறுகளும் கூட பழமை மிக்கவை. இவ்வாறான நிலையில் எமது சமூகத்தினை முன்னெடுத்துச் செல்லும் இளைய தலைமுறையினர் மாற்றத்தினை உள்வாங்கிக் கொண்டாலும் எமது பண்பாட்டிற்கு பங்கம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது எம் அனைவரின் கடமையாகும்.
மேற்குறிப்பிட்டவாறு மேற்கத்திய பழக்கவழக்கங்கள் நமது கலாச்சாரத்துடன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றையெல்லாம் நாம் பின்பற்ற தொடங்கினால் எமது வாழ்க்கையில் அவை பிரதிகூலமாக அமைந்துவிடும். ஆகவே எமது கலாசார வாழ்வியலுக்கு பங்கம் ஏற்படாதவாறு நாம்
பார்த்துக் கொள்ள வேண்டூம். சமூகமயமாக்கலானது நிகழும் போது தனிமனிதனிடத்திலும் சமூகத்திலும் பல மாறுதல்கள் ஏற்படும். அவற்றை நேர்மறையானதாக மாற்றிக் கொள்ள வேண்டியது எம் பொறுப்பாகும்.
எமது கலாச்சாரத்தையும் பண்பாட்டை முழுமையாக மாற்றாத வண்ணம் அவை அமைய வேண்டும் . கூறப்போனால் இன்று எவ்வித இன,மத மொழி அந்தஸ்து வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக வாழ்வதற்கு சமூகமயமாக்கல் உதவுகின்றது . இதன் மூலம் பல நல்ல பண்புகளையும் நாம் கற்றுக் கொள்கின்றோம். நேரம் முகாமைத்துவம் , வேற்றுமை பாராது பழகுதல், சிறிய சிறிய செயல்களிலும் பொறுப்புணர்வு தோன்றுதல் போன்றவை எம் மத்தியில் வளர்ந்துள்ளது.
இன்றைய சூழ்நிலையில் சமூகமயமாக்கல் முகவர்களாக விளங்கும் முதன்மை காரணிகளான குடும்பம் சம வயது குழுவினர் பாடசாலை போன்றனவும் துணை காரணிகளான வெகுசன ஊடகம் சமய நிறுவனங்கள் போன்ற பலவும் காணப்படுகின்றன . இதை தனிமனிதனின் நடத்தையில் புதிய மாறுதல்களை ஏற்படுத்துகின்றன . அதை மனிதனின் கலாசாரத்திலும் மாற்றத்தை கொண்டூ வருகின்றன . அனைவருக்குமான சகல உரிமைகளையும் பெற்றுத் தருவதனை கூட இவை உறுதி செய்கின்றன . இதன் மூலம் சமூக சமத்துவத்தை கொண்டூ வர முடியும் .
முன்பிருந்த சமூகப் பிளவுகளை தகர்ப்பதற்கும் உதவுகின்றன. இவ்வாறாக சமூகமயமாக்கல் செயன்முறையில் சாதகங்களும் அதே சமயம் பண்பாடு ரீதியாக சில பாதகங்களும் இருப்பினும் அவற்றினை முடிந்த வரையில் குறைத்து ஆரோக்கியம் மிகு சிறந்த சமூகத்தினை உருவாக்க வேண்டியது ஒவ்வொரு தனியாளினதும் கடமையாகும்.
ராதாகிருஷ்ணன் பூங்கோதை
(நான்காம் வருடம் கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி)
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.