வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் உயிரிழப்பு!




பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.

வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் சுவாசிப்பதற்குச் சிரமம் ஏற்பட்டு முதியவர் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.