(சித்தா)
அக்கரைப்பற்று தெற்கு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னணி அறநெறிப் பாடசாலையாக விளங்கும் கலைமகள் அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 2025.02.02 அன்று மிகச் சிறப்பான முறையில் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
தமிழர் பண்பாட்டு நடைமுறைகளை இளைய மாணவர் சமூகத்திற்கு ஊட்டும் வகையிலே இந்தப் பொங்கல் விழாவை கலைமகள் அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர் செல்வி.எஸ். சாந்தராணி அவர்களும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், பிரதேச கலாசார உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் சேர்ந்து முன்னெடுத்திருந்தனர். உழவுத் தொழிலுக்கு காரண கர்த்தாவான சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் தமிழர் பண்பாட்டு நிகழ்விலே மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் பங்குபற்றி இருந்தனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு பொங்கல் விழா பூஜையுடன் இனிதே நிறைவு பெற்றது.