மட்டக்களப்பு - காஞ்சிரங்குடா காமாட்சி மகா வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை


அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத்தராதர உயர்தர பெறுபெற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி பயின்ற ஜெ. யுதேசினி என்ற மாணவி 3A சித்தியை பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பாடசாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கதுகலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நான்கு பிரிவுகள் உயர்தர பரீட்சைக்கு தோற்றி உள்ள நிலையில் இவ்வரலாற்று சாதனை புரியப்பட்டுள்ளமை எடுத்துக்காட்டத்தக்க து. மேலும் இரு மாணவர்கள் 2A, B சித்தியையும் தோற்றிய மாணவர்கள் 92% சித்தியை பெற்று பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியையும் பெற்றுள்ளனர்.