லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர் கைது


அம்பாந்தோட்டை - லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படிகெபுஹெல பகுதியில் கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (25) மாலை லுனுகம்வெஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லுனுகம்வெஹெர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராமை பகுதியில் வசிக்கும் 29 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 2,107 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.