இளம் குடும்பஸ்தர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (20) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.