உதய கம்மன்பிலவிடம் 4 மணிநேர வாக்குமூலம் பதிவு!



முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதய கம்மன்பில குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (09) காலை முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இருந்து 4 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் உதய கம்மன்பில குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.