17 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் மூத்த சகோதரியின் காதலன் காலி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் காலி - அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞன் ஆவார்.
17 வயதுடைய சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் மூத்த சகோதரியின் காதலன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று, சந்தேக நபரான மூத்த சகோதரியின் காதலன் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் மூத்த சகோதரியுடன் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் சிறுமியின் மூத்த சகோதரியும் சந்தேக நபரான மூத்த சகோதரியின் காதலனும் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்த பின்னர் சந்தேக நபரான மூத்த சகோதரியின் காதலன் தனது கையடக்கத் தொலைபேசியின் சார்ஜரை விட்டுச் சென்றதாக கூறி மீண்டும் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில் சந்தேக நபரான மூத்த சகோதரியின் காதலன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் காலி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான மூத்த சகோதரியின் காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.