இந்தியாவுக்கு 25 வீத வரி விதிப்பு - அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு



இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
 
வரி விதிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடலை மேற்கொண்ட நிலையில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் முதல் புதிய வரி விதிப்பு அமுலுக்கு வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் கொள்வனவு செய்வதன் காரணமாக ட்ரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் கூறியிருந்த நிலையிலேயே தற்போது இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.