பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வேளையில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொலிஸ் சேவையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுவதை ஏற்றுக்கொள்கிறேன். இன்றளவில் மாத்திரம் பொலிஸ் சேவையில் சுமார் 28 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
முதற்கட்டமாக 5000 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.இதற்கமைய இந்த ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய முதற்கட்டமாக உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறும்.5000 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் சேவையில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சிறந்த முறையிலான வழிமுறைகளுக்கு அமைவாகவே பதவி உயர்வு வழங்கப்படும். கடந்த காலங்களில் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்போம் என்றார்.