இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் லண்டன் விஜயத்தின் போது பிரித்தானியாவில் உள்ள தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் கட்சியின் பிரித்தானிய ஆதரவு அணி நேற்றைய தினம் உருவாக்கப்பட்டது .
இலங்கைத் தமிழரசுக் கட்சி இலங்கைக்குள் இயங்கும் கட்டமைப்பு. அதற்கு வெளிநாட்டில் எந்தக் கிளைகளும் இல்லை. கிளைகள் வெளிநாட்டில் இயங்க முடியாது. ஆயினும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான குழுக்கள் செயற்பட முடியும் என்ற பின்புலத்தை நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி யினுடைய பொதுச் செயலாளர் எம். எ சுமந்திரன் தெளிவுபடுத்தினார்.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியாவிற்கான தலைவராக செயற்பட்ட சட்டத்தரணி ஆர். டி இரட்ணசிங்கம் தலைமையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு அணி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் அழைப்பாளராக விசிதரன் பிறைசூடி செயல்படுவார் என நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது .
இந்தக் கூட்டத்தை முன்னெடுத்த சட்டத்தரணி இரட்ணசிங்கம் தமிழரசுக் கட்சியின் நீண்ட கால உறுப்பினர் மற்றும் கட்சியோடு சேர்ந்தும் செயற்பட்டுவருகிறார் .
இலங்கைத் தமிழரசுக் கட்சி நாட்டில் திறமையாக இயங்குவதற்கு வழங்கக்கூடிய முழு ஒத்துழைப்பையும் இந்த ஆதரவு அணி செயற்படும் என நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது . ஐக்கிய இராச்சியத்தில் தமிழரசுக் கட்சியின் ஆதாரளார்கள் இவ் அமைப்புடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்படுகிறார்கள்.
இணைந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று இணைந்து கொள்ளுங்கள்
Click here https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdW7W_Diiq6tvFIzhAilYN53TQ_hu4_gIl07P7Z64AVIZagsw/viewform