மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிகளுக்குள் நுழைந்த குரங்குகள் பெண்கள் மீது கடித்ததில் இதுவரை 6 பேர் படுகாய மடைந்துள்ளனர்.
குரங்குகளின் அட்டகாசத்தினால் அப்பகுதியிலுள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் பயிர்கள் சேதமாகி வருவதுடன் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது அச்சத்திலுள்ளனர்.
வந்தாறுமூலை பேக்வீதியில் நேற்று வீட்டைவிட்டு வெளியில் சென்ற வயதான பெண் ஒருவர் மீது குரங்கு கடித்ததையடுத்து அவர் படுகாயமடைந்துள் நிலையில், அவர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 6 பேர் குரங்கு கடிக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் ஆவர்.
குடியிருப்புக்குள் குரங்குகள் நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்துவதாக அப் பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.