
கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 மே வரை) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் இலங்கைக்கு 67,147 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (13,946 பில்லியன் இலங்கை ரூபாய்) கிடைத்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் வாய்மொழி கேள்விகளுக்கு பதிலளித்தபோது, இலங்கை மத்திய வங்கியின் பதிவுகளை மேற்கோள் காட்டி பிரதி அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
2025 பெப்ரவரி 25 நிலவரப்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,345,801 எனவும் அவர் குறிப்பிட்டார்.